கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா; அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், இசாந்த் சர்மா

விளையாட்டுத் துறையில் உயரி யவிருதான கேல் ரத்னா விருதுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.

2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றதையடுத்து இந்த விருதுக்கு பரி்ந்துரை செய்யப்பட்டுள்ளார்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும், டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் பரிந்துைர செய்யப்பட்டுள்ளனர்.

மகளிர் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக அனைத்துப்பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஸ்மிருதி மந்தனாவுடன் சேர்ந்து ஷிகர் தவண் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

இதுவரை கேல்ரத்னா விருது கிரிக்கெட் வீரர்களில்

சச்சின் டெண்டுல்கர்(1997-98)

மகேந்திர சிங் தோனி(2007)

விராட் கோலி(2018)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *