தற்போது எதிர்மறை கருத்துக்களை மனதிற்குள் வரவேற்காதீர்கள்

*கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.*

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் குறித்து செயலாளர் நந்தகுமார் அளித்திருக்கும் விளக்கத்தில், தமிழகத்தில் *சென்னை* உள்பட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் இந்த சூழலில், *டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்துவது சாத்தியமல்ல* என்று கூறியுள்ளார்.

மேலும், *சூழல் சரியானதும்* ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்படும். *குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால அவகாசம்* அளிக்கப்படும்.

*3 மாத கால அவகாசம்* வழங்கப்பட்டே தேர்வுகள் நடத்தப்படும். எனவே, *தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.* தேர்வு நடத்துவதற்கு முன்பு சுமார் *3 மாத கால அவகாசம் அளிக்கப்படும்* என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP 1 & 2 தேர்வு நாட்கள் தள்ளிதான் போயிருக்கிறது…

*அரசு பணி வாங்க வேண்டும் என்று இலட்சிய வேட்கை உள்ளவர்களுக்கு* இது ஒரு *அரிய வாய்ப்பு* என்பதை மறுப்பதற்கு இல்லை..

மீண்டும்
அனைத்து பாடத்திட்டத்தையும் நிச்சியமாக படிப்பதற்கு இக்காலக்கட்டம் உதவும் என்ற நம்பிக்கையில் படிக்க தொடங்குகள்…

இந்த நேரத்தில் உலாவும் எதிர்மறை கருத்துக்களை நம்பி படிக்காமல் இருக்காதீர்கள்…

*இப்போது நம்பிக்கைதான் நமது ஆயுதம்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *