எகிப்தில் பயங்கர ரயில் விபத்து!

CURRENT AFFAIRS

எகிப்து நாட்டில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பெஹிரா மாகாணத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிகள் நேற்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் பெட்டிகள் கழண்டு மற்றொரு சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விபத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையான அறிவிப்புகளை வெளியிடும் பணிகளில் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *