அறநிலையத்துறை EO தேர்வு எழுதும் நண்பர்ளுக்கு,

TNPSC

இந்த தேர்வுக்கு காலி பணியிடங்கள் மிக குறைவு என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்

என்று நினைக்கிறேன்.போட்டி மிக கடுமையாக இருக்கும்………

 

பொதுத்தமிழையும்,பொது அறிவையும் விடுங்கள்.அரசியல் அறிவியல்,தற்கால நிகழ்வுகள்

தவிர மற்ற பாடங்கள் தொடர்பான வினாக்கள் பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே

கேட்கப்படும்….அதாவது,உங்களுக்கு எப்படி தயாராவது என்று நன்றாகவே தெரியும்.

தமிழ் இலக்கிய வரலாறு புத்தகங்களைக் கூட ஒரு பார்வை பார்த்துக் கொள்ளலாம்

 

இந்து சமயம்…..இதற்கு எவ்வாறு தயாராவது?

 

ஆறுமுக நாவலர் எழுதிய “இந்து சமய இணைப்பு விளக்கம்” இந்த தேர்வுக்கு

மிகவும் அவசியமான புத்தகம்…அதிலிருந்து 60 சதவீதம் முதல் 70 சதவீதம்

வரை கேள்விகள் வரலாம்…..நான் 2012 மற்றும் 2013 ஆண்டு தேர்வு எழுதும்போது

இதில் 55 சதவீத வினாக்களே கேட்டிருந்தார்கள்…சைவம் மற்றும் வைணவம்

என்ற புத்தகத்திலிருந்து வெறும் 1 அல்லது 2 வினாக்களே கேட்டிருந்தார்கள்

மற்ற கேள்விகளுக்கு சரியான விடைகள் தெரியவில்லை…

 

ஆனால் கேள்விகள் ஆர்வத்தை தூண்டுன் வகையில் அமைந்திருந்தன்….சித்தர்களை பற்றிய

கேள்விகள் உதாரணமாக பம்பாட்டி சித்தர் பற்றிய கேள்வியைச் சொல்லலாம்…

 

அந்த கேள்வி 2 புத்தகங்களிலும் இல்லை…..12 வது இந்திய பண்பாடு புத்தகங்களிலும்

இல்லை…..

 

2017 ல் நான் தொடர்ந்து சனி,ஞாயிறு  இரண்டு நாட்களிலும் எழுதிய வினாத்தாள்களில்

 

80 சதவீதம் ஆறுமுக நாவலரின் புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்டிருந்தார்கள்…1 மேற்கோள்

 

கேள்வி சைவமும் வைணவமும் புத்தகத்திலிருந்து கேட்டிருந்தார்கள்……

 

இதர வினாக்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது………ஆனால் அந்த 3 புத்தகங்களிலும்

 

இல்லாத கேள்விகள்…..

 

இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது………புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரலாறு புத்தகங்கள் அனைத்தும்

 

படித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்……அவர்கள் நல்ல தமிழ் அறிவை எதிர்பார்க்கிறார்கள்………

 

தத்துவம்,மெய்யியல் போன்ற துறைகளை எல்லாரும் உதாசினப் படுத்தி விடுகிறார்கள்……ஆனால்

அவர்கள் எதிர்பார்ப்பது இந்த துறைகளில் அறிவு பெற்றவர்களை……

 

அறிவு தேடலும்,புத்தக வாசிப்பும் மிக மிக முக்கியம்……இந்து சமயம் தேர்வில் 200 க்கு 190 க்கு

மேல் வாங்க வேண்டும் என்று விரும்பினால்………………………………….

தத்துவ இயலிலும்,தமிழ் இலக்கிய வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்தவர்…

 

அவர்தான் சிவஞான முனிவர்…….

 

எனவே தமிழ் இலக்கியவரலாறு, தத்துவ நூல்கள் படியுங்கள்…..வெற்றி வாகை சூடுவதற்கு வாய்ப்புகள்

 

அதிகம்….

 

நமது நண்பர்கள் சமண,புத்த மத தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை….

 

முக்கியத்துவம் கொடுங்கள்……பக்தி இலக்கிய பகுதிகளையும் நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள்

 

தேடுதல்,புத்தக வாசிப்பு இரண்டும் உயிர் போன்றது…….இந்து மதத்தை 3 புத்தகங்களுக்குள்

 

..

 

கடலை சந்திக்கப் போகும் நீங்கள் டம்ளருக்குள் நீச்சல் அடிக்க முயற்சி செய்யாதிர்கள்

இது எனக்கும் சேர்த்துதான்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *