உலகிலேயே முதல்முறையாக டெலி ரோபோடிக்ஸ் மூலம் இதய அறுவை சிகிச்சை : குஜராத் மருத்துவர் சாதனை!

CURRENT AFFAIRS
ரிலையன்ஸ் ஜியோவின் அதிவேக இண்டர்நெட் சேவையின் காரணமாக குஜராத்தின் அகமதபாத்தில் முதன்முறையாக டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குஜராத்தை சேர்ந்த தேஜஸ் பட்டேல் என்ற மருத்துவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மருத்துவமனையில் இருந்து சுமார் 32 கி.மீ தொலைவில் இருந்த அவர், ஜியோவின் அதிவேக இண்டர்நெட் சேவையின் மூலமாக டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் உதவியுடன் வெற்றிகரமாக பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்.

நடுத்தர வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது அனுமதியுடன் இணைய வழியாக அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள தலைமை அபெக்ஸ் ஹார்ட் நிறுவனத்தின் தலைமை இண்டர்வென்ஷனலாக உள்ள தேஜஸ் பட்டேல் என்ற மருத்துவரே இந்த சாதனையை நடத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் தொலைதூர இடங்களில் பயன்படுத்துவதற்கான மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது என்றும், இதுகுறித்து ஆய்வுகள் நடத்தி பிறகே அறுவை சிகிச்சை செய்ததாகவும் தகவல் அளித்துள்ளார்.
மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் உதவியுடன் 100 MBPS வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தியே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், இதற்கு ஒரு ஆய்வகம், ரோபோ மற்றும் அதிவேக இணைய வசதி இருந்தால் போதுமானது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். அமெரிக்காவுக்கு பிறகு டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை முதல்முறையாக குஜராத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதய அறுவை சிகிச்சை செய்த சாதனையை தேஜஸ் பட்டேல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *