வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

CURRENT AFFAIRS

இந்தியாவில் 2035-ம் ஆண்டை நோக்கி வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் 9.17 சதவீதத்துடன் முதல் இடத்தினைச் சூரத் பிடித்துள்ளது. தமிழ் நாட்டில் இருந்து திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

2019-2035-ம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய டாப் 10 இந்திய நகரங்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்.

தரவரிசை நகரம் நாடு ஆண்டு வளர்ச்சி (%)
1 சூரத் இந்தியா 9.17
2 ஆக்ரா இந்தியா 8.58
3 பெங்களூரு இந்தியா 8.5
4 ஹைதராபாத் இந்தியா 8.47
5 நாக்பூர் இந்தியா 8.41
6 திருப்பூர் இந்தியா 8.36
7 ராஜ்கோட் இந்தியா 8.33
8 திருச்சிராப்பள்ளி இந்தியா 8.29
9 சென்னை இந்தியா 8.17
10 விஜயவாடா இந்தியா 8.16

2035-ம் ஆண்டு உலகளவில் வேகமாக பொருளதார வளர்ச்சி அடைந்து இருக்க கூடிய டாப் 10 பட்டியலில் 4 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜிடிபி தரவுகளை வைத்து இந்தப் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார குழு கணித்துள்ளது.
தரவரிசை நகரங்கள் 2018-ல் இருந்து மாற்றம்

1 நியூ யார்க் –
2 டோக்கியோ –
3 லாஸ் ஏஞ்சல்ஸ் –
4 லண்டன் –
5 ஷாங்காய் 4
6 பீஜிங் 7
7 பாரீஸ் -2
8 சிக்காகோ -2
9 கவ்ங்ஷவ் 10
10 ஷேன்ஜென் 10

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *