2019ஆம் ஆண்டுத் தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு.

டி.என்.பி.எஸ்.சி. திட்ட அட்டவணைப்படி, குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள பல்வேறு பணி இடங்களை நிரப்ப 52 தேர்வுகள் 2019ம் ஆண்டில் நடத்தப்பட உள்ளன.

2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகளும், 2019ம் ஆண்டு புதிதாக 29 தேர்வுகளும் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. மொத்தம் மொத்தம் 52 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

தேர்வுகளுக்கான அறிவிக்கை தேதி, தேர்வு நடைபெறும் தேதிகள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள உதவி அரசு வழக்கறிஞர், உதவி சிறை கண்காணிப்பாளர், தடய அறிவியல் துறையின் தொழில்நுட்ப ஆய்வாளர், புள்ளியியல் பேராசிரியர்கள், தொல்லியல்துறை நூலகர், மாவட்டக்கல்வி அலுவலர், உப்பு ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களை நிரப்ப தேர்வுகள் நடைபெறும்.

 

 

http://www.tnpsc.gov.in/2019_ARP_Planner_31_12_2018.pdf

டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு

சென்னை :டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கு எவ்வளவு பணியிடங்கள், தேர்வு அறிவிப்பு உள்ளிட்டவை அட்டவணையில் இடம்பெறும்.

2019ஆம் ஆண்டுத் தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு.
குரூப் I – JANUARY
குரூப் II & IIA – MAY
குரூப் IV – JUNE


www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தில் பணியிடங்கள், தேர்வு அறிவிப்பு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு நடத்தப்படும் முறை, பாடத்திட்ட விபரங்கள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் பின்னர் வெளியாகும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான முழு திட்ட அட்டவணையை www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *