உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட உலகின் மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 9 நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் மாசு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் இந்தியாவில் 5 ஆண்டு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 க்குள் நாடு முழுவதுமுள்ள மாசுவின் அளவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க இந்த திட்டம் வழிவகை செய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் மாசு அளவை கட்டுப்படுத்துதல், வாகனங்களால் ஏற்படும் மாசை குறைத்தல், கிராமப்புற சூளைகளில் உருவாகும் மாசினை கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
