நடப்பு நிகழ்வுகள் ஒருவரி மார்ச்

 மார்ச் 01, 2019

 

 1. மார்ச் 01 – ஜீரோ பாகுபாடு தினம், தீம் – ‘Act to change laws that Discriminate‘.
 2. ரயில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 81% குறைந்துள்ளது
 3. இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் சிமியை சட்டவிரோத அமைப்பில் உள்துறை அமைச்சகம் இணைத்துள்ளது.
 4. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார்.
 5. ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய விசாரணை நிறுவன [என்ஐஏ] அலுவலகத்தை திறந்துவைத்தார்.
 6. இந்திய பொருளாதாரம் 2019-20 ல்3% ஆக உயரும் எனக் அமெரிக்க அடிப்படை மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணிப்பு.
 7. விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.
 8. தெற்கு மத்திய இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை இரயில்வேயை மறுசீரமைத்து ஒடிசாவில் உள்ள ராயகடாவை தலைமையிடைமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்.
 9. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையை உலகளாவிய மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
 10. 1299 கோடி ரூபாய் செலவில் ஹரியானாவில் உள்ள மானேதியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 11. ஜம்மு மற்றும் காஷ்மீறில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளது.
 12. காணாமற்போன போன குழந்தைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம். NCMEC, USA உடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிப்லைன் அறிக்கைகளை பெற இது வழிவகுக்கும்.
 13. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்
 14. துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்- சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரை இறுதிப் போட்டியில் வென்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்து 100வது பட்டம் வெல்லப்போகும் வாய்ப்பை பெற்றார்.
 15. சர்வதேச கடற்கரை கைப்பந்து (volleyballபோட்டி- FIFB கடற்கரை கைப்பந்து போட்டி நடத்தும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 50 வது நாடு ஆனது.
 16. பங்கேற்கும் நாடுகள் – ரஷ்யா, போலந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, செக் குடியரசு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
 17. ஈரான், சபாஹாரில் நடைபெற்ற மக்ரான் கோப்பையில் தேசிய சாம்பியன் தீபக் சிங் (49 கிலோ) தங்கப் பதக்கத்தை வென்றார்.

மார்ச் 02, 2019

 

 1. கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே பனாஜியில் மூன்றாம் நிலை புற்றுநோய் மையத்தின் அடிக்கல் நாட்டினார்.
 2. இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் அட்டாரி-வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்
 3. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஹம்சா பின்லேடன் பயண தடை, சொத்து முடக்கம் மற்றும் ஆயுதத் தடை பட்டியலில் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
 4. அமெரிக்கா வெனிசுலாவில் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
 5. அமெரிக்கா தயாரித்த F-16 இன் தவறான பயன்பாட்டிகாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா தகவல் கேட்டுள்ளது
 6. 7 வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (RCEP) ஆலோசனை கூட்டம், கம்போடியாவில் உள்ள சீம ரீப் பகுதியில் நடைபெற்றது
 7. பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் இந்தியாவுடன் முழுமையான ஒற்றுமையை வலியுறுத்துகிறது பிரான்ஸ்.
 8. பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு கட்டுமான தொழில்நுட்ப நிகழ்வில் உரையாற்றினார்.
 9. ஏர் மார்ஷல் ஆர்.டி.மத்தூர் AVSM VSM – IAF இன் கிழக்கு ஏர் கமாண்ட்டின் தலைவராக பொறுப்பேற்றார்
 10. ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார் – மேற்கத்திய ஏர் கமாண்ட்டின் விமானப்படை தலைவர்
 11. இந்தோ பசிபிக் பிராந்திய உரையாடல் – 2019 இரண்டாம் பதிப்பு (IPRD) புது தில்லியில்நடைபெற்றது
 12. 2016-17 ஆண்டிற்கான 25 வது பிரதமரின் டிராபி – சிறந்த ஒட்டுமொத்த செயல்திறன் – டாடா ஸ்டீல் லிமிடெட், ஜாம்ஷெட்பூர்
 13. 2வது சிறந்த ஒட்டுமொத்த செயல்திறன் – JSW ஸ்டீல் லிமிடெட்- விஜயநகர்
 14. மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி புது தில்லியில் ‘மன் கி பாத் – ரேடியோவில் ஒரு சமூக புரட்சி’ என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்..
 15. நேபாளத்தின் COAS ஓபன் மராத்தான் மற்றும் ரன் ஃபார் ஃபன் – இந்தியாவின் சாஷாங் சேகர் (சிஐஎஸ்எஃப் வீரர்) வெற்றி பெற்றார்.

மார்ச் 03 & 04, 2019

 

 1. மார்ச் 3 – உலக வனவிலங்கு நாள்2019 தீம்: “Life below water: for people and planet”
 2. குஜராத், அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
 3. மத்திய பிரதேசத்தில் குவாலியரில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டிற்க்கான மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 4. பல்கலைக்கழகங்களில் அரசு லோக்பாலை நியமிக்கவுள்ளது, பல்கலைக் கழகங்களுக்கு லோக்பால் அமைக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும்.
 5. மும்பை மாநகரின் நாட்டின் முதல் மோனோரயிலின் இரண்டாவது கட்டம் துவங்கியது
 6. இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் திரிபுரா அகர்தலாவில் பல எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார்.
 7. டெல்லி மற்றும் லாகூருக்கு இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது.
 8. சிரியா 2011 க்குப் பிறகு முதல் அரபு கூட்டத்தில் பங்கேற்கிறது
 9. சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தரப் உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது
 10. லகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை – 57) இந்தியா 1) சுவிட்சர்லாந்து 2) நெதர்லாந்து 3) சுவீடன்
 11. ஐசிசி பெண்கள் ODI பந்து வீச்சாளர்கள் தரவரிசை – 1) ஜுலன் கோஸ்வாமி 5) ஷிகா பாண்டே
 12. ஐசிசி பெண்கள் அணி ODI அணி தரவரிசை – 2) இந்தியா 1) ஆஸ்திரேலியா
 13. மேதா நார்வேக்கர் – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர்
 14. டெல்லி-கஜியாபாத்-மீரட் பிராந்திய ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம்-க்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது – இந்த திட்டம் 2024 இல் நிறைவு செய்யப்படும்.
 15. ஆதாரின் தன்னார்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்
 16. சிஐஎஸ்எஃப், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 50 ஆண்டுகள் ஆனதைக் குறிக்க நொய்டாவில் உள்ள யமுணா எக்ஸ்ப்ரெஸ்வேயில் ஒற்றை வரி சைக்கிள் அணிவகுப்பில் கின்னஸ் உலக சாதனையை புரிந்துள்ளது.
 17. இந்தியா மற்றும் பங்களாதேஷ் படைகள் இடையே கூட்டு ராணுவ பயிற்சி ‘SAMPRITI‘ யின் எட்டாவது பதிப்பு 2019 பங்களாதேஷ், தக்காவில் நடைபெற்றது.
 18. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஃபோல் ஈகிள் கூட்டு இராணுவப் பயிற்சிகளை முடிவுக்கு கொண்டுவருவதாகக் கூறியுள்ளன.
 19. டான் கொலோவ்-நிகோலா பெட்ரோவ் போட்டி – தங்க பதக்கம் – 65 கிலோகிராம் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா, பெண்கள் 59 கிலோ பிரிவில் பூஜா தந்தா.
 20. ரோஜர் ஃபெடரர் 100 வது ATP பட்டத்தை வென்றுள்ளார்.

மார்ச் 05, 2019

 1. அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லையில் BOLD-QIT திட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
 2. மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா (ஐ/சி) தில்லி, செங்கோட்டையில் ஆசாதி கே திவானே’ அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
 3. புது தில்லி ஜன்பத்-ல் புதுப்பிக்கப்பட்ட கைத்தறி சந்தையை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திறந்து வைத்தார்.
 4. நேபாளஅரசு அதிகாரிகள் புது டெல்லியில் INGAF பயிற்சி வகுப்பில்சேர்ந்தனர்.
 5. GSPபட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க வாஷிங்டன் முடிவு
 6. பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலம் வஸ்த்ரால் நகரில் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 7. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் “இளம் அறிவியலாளர் நிகழ்ச்சித்திட்டம்” “யுவா விஞ்ஞானி கார்யக்ரம்” என்றழைக்கப்படும் பள்ளி சிறுவர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.
 8. பிரதமர் அகமதாபாத்தில் ஒருதேசம், ஒரு கார்டு-ஐ அறிமுகப்படுத்தினார், இதன்மூலம் நாடு முழுவதும் ஒரே கார்டு மூலம் அனைத்து மெட்ரோ மற்றும் இதர போக்குவரத்து அமைப்புகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 9. இந்தியா மற்றும் ஒமான் இடையே இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சி அல் நகா 2019-வின் மூன்றாவது பதிப்பு, ஓமானில் உள்ள ஜபெல் அல் அக்தார் மலைகளில் நடைபெற்றது.
 10. யோனெக்ஸ் அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் 2019 பர்மிங்காம் நகரில் தொடங்கியது

மார்ச் 06, 2019

 1. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மாநிலத்தின் புதிய 5 ஆண்டு தொழில்துறை கொள்கையை வெளியிட்டார்.
 2. சீனாபனிப்புகை(smog) எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது
 3. ஸ்வீடிஷ் அகாடமி இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என்று கூறியது.
 4. ஹஃபிஸ் சயீத் தலைமையிலான ஜமாத்–உத்–தாவா தடை செய்யப்பட்டஅமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
 5. கிராமப்புற வருவாய்களை மேம்படுத்துவதற்காக NRETP க்கு 250 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி முடிவு.
 6. கிராமப்புறஇந்தியாவில் 5% வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன.
 7. வேளாண் பொருட்களின் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான நிதியுதவி வழங்க திட்டம்
 8. உத்தராகண்ட் பேரிடர் மீட்பு திட்டத்தின் கூடுதல் நிதிக்காக 96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலக வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
 9. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் 72 கல்வி நிலையங்களை புனரமைப்பதற்காக மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) ரூர்கி நியமிக்கப்பட்டுள்ளது.
 10. இளைஞர்களுக்கான திறமை மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கு NITTTRC போபால், ஸ்ரீ விஸ்வகர்மா திறமை பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்
 11. வெப் வொண்டர் உமன்[பெண்கள்] பிரச்சாரத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
 12. ஸ்வச்சசர்வேக்ஷன்2019 விருதுகள் – இந்தோர் [தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக] – சுத்தமான நகர விருது
 13. புது தில்லி நகராட்சி கவுன்சில் பகுதி – தூய்மையான சிறு நகர விருது
 14. உத்தரகண்ட் இன் கௌச்சார் – கங்கா ஆற்றில் உள்ள சிறந்த நகரம்
 15. முதலிடம் பிடித்த நகரங்களுக்கு தூய்மைக்குரிய பணி செய்ததற்காக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை விருதாக வழங்கப்பட்டது.

மார்ச் 07, 2019

 1. மத்தியப் பிரதேசம் பழங்குடி மாவட்டங்களில் பண்டைய பழங்குடி மொழியான கோண்டி கற்பிக்கப்பட உள்ளது.
 2. 10 நாள் தொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டம் கார்கிலில்முடிவடைந்தது.
 3. பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார்.
 4. கேங்டாக், நமச்சி, பசிகாட், இட்டாநகர் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
 5. உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் 300 கோடி ரூபாய் மதிப்பிலான டெஹ்ராடூன்-முசோரி ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
 6. சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகஈரானுடன் ஐரோப்பிய ஒன்றியம் தொடரந்து பணிபுரியும்
 7. மரணம் அல்லது கலகம் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளை வெளியிட்ட வலைதளங்களுக்கு நிரந்திரத் தடைவிதிக்கப்படும் மற்றும் 22,700 அமெரிக்க டாலருக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என ரஸ்சியா சட்டம் இயற்றியது.
 8. பாகிஸ்தானுக்கான விசா கொள்கையை அமெரிக்கா திருத்தியுள்ளது.
 9. சவூதி அரேபியாவை பணமோசடிப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது.
 10. ஜன் அவ்ஷதி திட்டத்தின் கீழ், மலிவான விலையில் தரமான மருந்துகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.
 11. 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க அரசு திட்டம்.
 12. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரு ஹைட்ரோ மின்சார திட்டத்திற்கான முதலீட்டிற்கு அமைச்சரவை அனுமதி.
 13. சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க CCEA ஒப்புதல்.
 14. 1320 மெகாவாட் குர்ஜா சூப்பர் தெர்மல் மின் ஆலைக்கு CCEA முதலீடுசெய்ய அங்கீகாரம் வழங்கியது.
 15. மத்திய கல்வி நிறுவனங்களின் (ஆசிரியர்களின் பணியிடங்களின்ஒதுக்கீடு) அவசரச் சட்டம், 2019.
 16. வீடு மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி இ-தார்த்தி ஆப்-ஐ தொடங்கினார். இதன் மூலம் – மாற்றங்கள், பதிலீட்டு மற்றும் சொத்துக்கள் தொடர்பான திருத்தல் ஆகியவை ஆன்லைனில் செய்யும் வசதி உள்ளது.
 17. இ-தார்த்தி ஜியோ போர்ட்டல் [e-Dharti GeoPortal], இதன் மூலம் சொத்துக்களின்அடிப்படை விவரங்கள், அதன் இருப்பிடத்தை வரைபடத்துடன் காண முடியும்.

மார்ச் 08, 2019

 1. மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம், தீம் – ‘Think Equal, Build Smart, Innovate for Change’
 2. மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா
 3. 36 நாடுகள் சவூதி அரேபியா மீது மனித உரிமை மீறலுக்கு கண்டனம்
 4. நேட்டோவின் பொது செயலர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க், தரைவழி அடிப்படையிலான அணுசக்தி ஏவுகணைகளை ஐரோப்பா பயன்படுத்துவதை நிராகரித்தார்.
 5. பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச மகளிர் தினத்தன்று, உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற தேசிய பெண்கள் வாழ்வாதார கூட்டம் 2019ல் கலந்து கொண்டார்.
 6. புதுடில்லியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் கண்டுபிடிப்பாளர்களை [Womennnovators] அறிமுகப்படுத்தி, கருத்தரங்கில் உரையாற்றினார் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.
 7. ஆசாப் சயீத் – சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதர்
 8. பத்மா லட்சுமி – ஐ நா வளர்ச்சி திட்டத்தின் நல்லெண்ண தூதர்
 9. இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டம்
 10. மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கான ஸ்டார் மதிப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது
 11. இந்தியாவின் ஸ்டீல் ஆணையத்தின் கீழ், ஹரியானாவில் உள்ள நுஹ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் “மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டத்தை” ஆதரவு அளிக்கிறது.
 12. ஆந்திராவின் அமராவதியிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரிலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.) இரண்டு புதிய பெஞ்ச் அமைக்க அரசு அங்கீகரித்துள்ளது புதுடில்லியில் 2018 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார், இது இந்தியாவில் பெண்களுக்கு வழங்கும் மிக உயரிய கௌரவமாகும்.
 13. இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பு இராணுவத் தொப்பி அணிந்து விளையாடினர், அவர்களது போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

மார்ச் 09, 2019

 1. மத்தியப் பிரதேசத்தில், ஆறு சுத்தமான நகரங்களின் அனைத்து சுத்திகரிப்பு ஊழியர்களுக்கும் தங்கள் சிறந்த பணிக்கு கௌரவமாக 5000 ரூபாய் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
 2. பிரசார் பாரதி மேலும் 11 மாநிலங்களில் டி.டி.சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது,
 3. அகால மரணம் மற்றும் மருத்துவ காப்பீடு தொடர்பான கவலைகளை தீர்க்க நாடு முழுவதும் உள்ள வக்கீல்கள் நலனுக்காக ஒரு விரிவான காப்பீடு திட்டத்தை பரிந்துரைக்க சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சகத்தின் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது
 4. பிரதமர் லக்னோ மற்றும் கஜியாபாத் நகரங்களில் மெட்ரோ திட்டத்தை துவக்கி வைத்தார் ரயில்களில் பெண்களுக்கான தனிப்பெட்டி அமைக்கும் திட்டத்தை இலங்கை அரசுதுவங்கியது
 5. பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலாவின் மத்திய வலதுசாரி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து வாரங்கள் முன்னதாக ராஜினாமா செய்துள்ளது.
 6. உலகின் மிக வயதான வாழும் நபராக 116 வயதான ஜப்பானிய பெண் கேன் தனகா அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
 7. புதுடில்லியில் இந்தியா-ஜப்பானின் முதல் விண்வெளி பேச்சுவார்த்தை நடைபெற்றது
 8. மத்திய வங்கி,ஏடிபி வங்கி 26 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம்
 9. 390 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை அரசு 87 % வரை குறைத்துள்ளது
 10. அயோத்தி நில வழக்கிற்கு மூன்று உறுப்பினர்கள் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது
 11. USSOCOM தளபதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தை சந்திப்பு
 12. இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் டி20 தொடர், இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
 13. பர்மிங்ஹாமில் நடைபெற்ற அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் – பேட்மின்டன் போட்டியில் சாய்னா நேவால் 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தாய் ட்சூ யிங்கிடம் தோல்வி அடைந்தார்.

மார்ச் 10 & 11, 2019

 1. ஓபிசி–க்கு 27% இட ஒதுக்கீடு செய்ய மத்தியப் பிரதேச மாநில அரசு அவசரச் சட்டம்.
 2. நாகலாந்து முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது
 3. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.
 4. மதத்தின் மீதான கொள்கைகளை விமர்சனம் செய்த அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு
 5. பரிமாற்ற விகிதங்கள் உட்பட, பல முக்கிய விஷயங்களில் சீனாவும் அமெரிக்காவும் ஒருமித்த உடன்பாட்டை எட்டியுள்ளன
 6. வட கொரியர்கள் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்
 7. இந்தியா 2025க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்
 8. சூரத் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
 9. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய விசா ஒப்பந்தம்
 10. காஸியாபாதில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 50-வது உருவாக்கதின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
 11. புல்வாமா வகை தாக்குதல், போரினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க இந்திய பாதுகாப்பு ஆய்வகம் ‘காம்பேட் மருந்துகளை’ உருவாக்கியது
 12. ஜனாதிபதி கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்
 13. பின்லாந்து ஹெல்சின்கியில் நடைபெறும் 38வது கீபீ குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ பிரிவில் கவீந்தர் சிங் பிஷ்த் தங்கம் வென்றார்
 14. அமெரிக்காவில் நடைபெறும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.

மார்ச் 12, 2019

 1. அசாமில் 7 லட்சத்திற்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள்.
 2. தண்டி மார்ச் ஆண்டுவிழா, தண்டி யாத்திரைக்குச் சென்ற அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்
 3. தேர்தல் ஆணையம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய மூன்று சிறப்பு கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது
 4. கேரள உயர் நீதிமன்றம் பிளக்ஸ், மற்றும் மக்காத பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது
 5. நிதி அமைச்சகத்தின் பொறுப்பாளரான மேகாலயா முதல்வர் கொன்ராட் கே சங்மா, 2019-2020க்கான வரவு செலவு திட்டத்தை வழங்கியுள்ளார்.
 6. அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் NRC வரைவில் இருந்து விலக்குவது வாக்குரிமைகளை பாதிக்காது
 7. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் செயலிழப்புக்கு பின்னர் போயிங் 737 மாக்ஸ் 8 ஜெட் விமானங்களை தரையிறக்கும் நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து இணைந்தது
 8. ரோஹிங்யா மக்கள் இடமாற்றத் திட்டத்தால் புதிய நெருக்கடி ஏற்படும் என ஐ.நா.எச்சரிக்கை
 9. கராகஸில் உள்ள தூதரகத்திலிருந்து மீதமுள்ள இராஜதந்திர ஊழியர்களை அமெரிக்கா திரும்பப் பெற உள்ளது
 10. 2019 ஜனவரி மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி 1.7% ஆக குறைந்துள்ளது
 11. ஆஹார் – சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் விழாவின் 34 வது பதிப்பு புது டெல்லியில் தொடங்கப்பட்டது.
 12. முகம்மது ஷ்தய்யே – பாலஸ்தீனிய பிரதமர்
 13. ஜினடைன் ஜிடேன் – ரியல் மாட்ரிட் அணியின் கால்பந்து பயிற்சியாளர்
 14. சி லால்சாவ்தா – மிசோரமின் முதல் லோகாயுக்தா
 15. ஐந்தாவது தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின், SAFF, மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்திலுள்ள பிராட்நகரில் தொடங்கியது.
 16. இந்திய-கனடா ஜோடியான ரோஹன் போபண்ணா மற்றும் டெனிஸ் ஷாபலோவ் ஆகியோர் செர்பிய-இத்தாலிய ஜோடியான நோவக் ஜோகோவிக் மற்றும் ஃபேபியோ போக்னினியிடம் தோல்வி அடைந்தனர்.

மார்ச் 13, 2019

 1. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் பொறுப்பான வணிக நடத்தை தொடர்பான தேசிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது
 2. போயிங் 737 மேக்ஸ் விமானத்தை நியூசிலாந்து தடை செய்தது
 3. 200 கோல்டன் ஜூபிலி உதவித்தொகைகளை இந்தியா வழங்கியது
 4. செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என நாசா கூறியது
 5. இந்தியாவின் ஒரு தவளை இனம் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என கண்டுபிடிப்பு
 6. ஆர்.பி.ஐ. OMO க்கள் வழியாக 12,500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது
 7. ஆப்கானிஸ்தானில் இருந்து சபாஹார் துறைமுகம் வழியாக இந்தியா முதல் டி.ஐ.ஆர்–யைப் Transports Internationaux Routiers’ (TIR)]  பெற்றது
 8. வெளியுறவுச் செயலாளர் கோகலே அமெரிக்காவின் செயலாளர் ஹேலை சந்தித்தார்
 9. மக்களவை சட்டத்தின் 14 வது பிரிவின் உட்பிரிவு (2) இன் கீழ் சட்டப்பூர்வ அறிவிப்புகளை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 10. EWSக்கான 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நியாயப்படுத்துகிறது
 11. டிஜிசிஏ போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தை தரையிறக்க முடிவு
 12. நைஸ், வியன்னா மற்றும் லொகார்னோ உடன்படிக்கை அணுகுமுறைக்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தது
 13. 5வது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) மகளிர் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6-0 என்ற கணக்கில் மாலத்தீவை தோற்கடித்தது.
 14. இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மார்ச் 14, 2019

 1. மார்ச் 14 – உலக சிறுநீரக தினம், தீம், ‘அனைவருக்கும் எல்லா இடங்களிலும் சிறுநீரக ஆரோக்கியம்’.
 2. இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்கள் அமைக்க அமெரிக்கா திட்டம்
 3. ஏமன் போருக்கு ஆதரவு அளிப்பதை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க செனட்டில் வாக்குப்பதிவு
 4. உலகம் முழுவதும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய பரிந்துரை
 5. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மனுவை விசாரித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதன் உத்தரவு ஆணையை நிறுத்திவைத்துள்ளது
 6. கர்தார்பூர் காரிடாருக்கான விதிமுறைகளை விவாதிக்க மற்றும் இறுதி செய்ய இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் கூட்டம் அட்டாரி-வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் நடைபெற்றது.
 7. நிதி ஆயோக் மற்றும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனம் (USAID), இணைந்து இந்தியாவில் எரிசக்தி மாடலிங் மன்றத்தின்(IEMF) முதல் ஒர்க்ஷாப்பிற்கு ஏற்பாடு செய்தது,
 8. BCCI நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைகளைத் தீர்க்க மத்தியஸ்தராக பிஎஸ் நரசிம்மாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது
 9. ராஜஸ்தான் பாலைவனத்தில் இரண்டாவது முறையாக உள்நாட்டில் தயாரான, குறைந்த எடை, எளிதாக பயன்படுத்தக்கூடிய மேன் போர்ட்டபிள் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை (MPATGM) டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்தது.
 10. மார்ச் 14 முதல் மார்ச் 21 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு 2019 நடைபெறும்,
 11. தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 5வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப் அரை இறுதி போட்டிக்கு வங்கதேசம் மற்றும் நேபாளம் தகுதிபெற்றது.

மார்ச் 15, 2019

 1. மார்ச் 15 – உலக உறக்க தினம், தீம் ‘Healthy Sleep, Healthy Aging,’
 2. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) ‘விஷ்ணு நிவாஸம்’ என்ற ஓய்வு விடுதி மற்றும் யாத்திரை விடுதி ISO சான்றிதழை பெற்றுள்ளது
 3. ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்
 4. இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், குஜராத்தின் காந்தநாகரில் (மார்ச் 15, 2019) புதுமை மற்றும் தொழில் முனைவோர் விழாவை தொடங்கி வைத்தார்.
 5. எம்.ஆர்.குமார் – இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்(LIC) புதிய தலைவர்
 6. ஆஸ்திரேலியா இலங்கையுடன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளத் திட்டம்
 7. தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதி

மார்ச் 16, 2019

 1. கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் மத்தியில் தேர்தல் ஓட்டளிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 2. இளம் பருவத்தினர் மத்தியில் ஊட்டச்சத்து பிரச்சனைக்கு தீர்வு காண தெலுங்கானா மாநிலத்தில் ‘Iron for Adolescents’ or ‘FeFA’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 3. ஐ.நா. 1267 தடைகளின் கீழ் மசூத் அசாரை பட்டியலிடும் முயற்சிகளை இந்தியா தொடர உள்ளது
 4. ஸ்லோவாகியாவின் ஐந்தாவது நேரடி ஜனாதிபதி தேர்தல் 2019
 5. 3 விண்வெளி வீரர்கள் ISS ஐ வெற்றிகரமாக அடைந்தனர்
 6. பிரேசில் நாட்டை தலைமையக கொண்ட முதல் BRICS ஷெர்பா கூட்டம் பிரேசிலின் குரிடிபாவில் முடிவடைந்தது
 7. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் (UNEA) நான்காவது கூட்டம் 2019 மார்ச் 11 முதல் 15 வரை நைரோபியில் நடைபெற்றது
 8. ஆளில்லா வான்வழி வாகனங்களை உருவாக்க இந்தியா-அமெரிக்க முடிவு
 9. தளவாடங்களுக்கு உதவும் வகையில் பல்நோக்கு கப்பலை தெற்கு கடற்படை நியமித்துள்ளது
 10. மகாராஷ்டிரா புனேவின் ஸ்வாட்டி ஷிங்கடே, 2018-19 ஆம் ஆண்டுக்கான டிடி மகளிர் கிசான் விருதிற்கான முதல் பரிசை பெற்றார்.
 11. பாட்டியாலாவில் நடைப்பெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளத்தில், கமல்ப்ரீத் கவுர் தட்டெறியும் போட்டியில்25 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்
 12. 2020 ஆம் ஆண்டில் யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது
 13. ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றது.

மார்ச் 17 & 18, 2019

 1. அசாமில், வாக்காளர்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக நல்பரி கிராமப்புற–கலாச்சார பேரணி தொடங்கப்பட்டது.
 2. கோவா முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் பனாஜியில் காலமானார்
 3. ரஷ்யா கடந்த ஆண்டு உக்ரைனுடன் ஏற்பட்ட கடற்படை மோதல் தொடர்பான தங்கள் பங்கிற்கு புதிய மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை விதித்தது.
 4. திருவண்ணாமலை மீன்வளத்துறை, ஆப்பிரிக்க பூனை மீன் வகைகளை வளர்ப்பது குற்றம் என அறிவித்தது
 5. சத்த மாசுபாடு வரைபடத்தை தயாரிக்க CPCBக்கு NGT ஆணை
 6. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஒரு கார்பன் நடுநிலைத் திட்டத்தை அமைக்க மாநில தொழில் துறை திட்டமிட்டுள்ளது.
 7. ஐசிசி ஒருநாள் தரவரிசை – பேட்ஸ்மேன் – 1) விராட் கோலி 2) ரோஹித் ஷர்மா
 8. பந்துவீச்சாளர்கள் – 1) ஜஸ்ப்ரித் பூம்ரா 2) நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்
 9. பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மீதான சர்வதேச ஒர்க்ஷாப் மார்ச் மாதம் 19 ஆம் புது தில்லியில் துவங்க உள்ளது
 10. ரியர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் VSM – கடல் பயிற்சிக்கான தலைமை அதிகாரி (FOST)
 11. இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகியவை வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம்.
 12. மே மாத தொடக்கத்தில் இரண்டாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கந்தேரியை கடற்படையில் சேர்க்க திட்டமிடபட்டுள்ளது.
 13. ஆப்பிரிக்கா–இந்தியா இராணுவப் பயிற்சி -2019 புனேயில் உள்ள அவுன்ட் இராணுவ நிலையத்தில் நடைபெற உள்ளது.
 14. தரவரிசையில் 84 வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்
 15. அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் தியெம் சாம்பியன் பட்டம் வென்றார்.
 16. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி அண்ட்ரீஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.
 17. தென்னாப்பிரிக்க ஓபன் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் ஐரோப்பிய டூர் பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியப் பெண் கோல்ப் வீராங்கனை எனும் சாதனை படைத்தார் தீக்ஷா டாகர் .
 18. கோபி தொனக்கால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்
 19. அபுதாபியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றது
 20. 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியாவின் இர்பான் தகுதி
 21. 5வது தெற்காசிய கால்பந்து சம்மேளனம் நடத்தும் மகளிர் சாம்பியன்ஷிப் அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

மார்ச் 19, 2019

 • துரை மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
 • மும்பை பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமானது என சீனா அறிவிப்பு.
 • இடாய் சூறாவளியால் மூன்று தென் ஆப்பிரிக்க நாடுகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு.
 • ஐ.நா. காப்புரிமை தரவு பட்டியலில் ஆசிய நாடுகள் எழுச்சி.
 • 2018ஆம் ஆண்டில் அதிக காப்புரிமை விண்ணப்பங்களுக்கான பட்டியலில் அமெரிக்கா முதலிடம்.
 • குடியிருப்பு மனைகளுக்கான புதிய ஜிஎஸ்டி வீதங்களின் மாற்றீட்டு திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி.

BWF பேட்மிண்டன் தரவரிசை

பெண்கள்

1) தை சூ யிங்

6) பி வி சிந்து

9) சாய்னா நேவால்

94) ரியா முகர்ஜி

ஆண்கள்

1) கெண்டோ மொமொட்டா

7) கிதாம்பி ஸ்ரீகாந்த்

14) சமீர் வர்மா

19) பி சாய் பிரணீத்

 • இந்தியா-ஆப்பிரிக்கா திட்டக் கூட்டுறவுக்கான 14 வது CII-EXIM வங்கிக் கூட்டம் புது தில்லியில் முடிவடைந்தது.
 • ஸ்டீல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் விஜிலென்ஸ் கூட்டம் புது தில்லியில் முடிவடைந்தது.
 • புதிய கோவா முதல்வராக பதவியேற்றார் – பிரமோத் சாவந்த்
 • மகாராஷ்டிராவுக்கான சிறப்பு செலவின கண்காணிப்பாளர் – ஷைலேந்திர ஹந்தா
 • தமிழ்நாட்டிற்கான சிறப்பு செலவின கண்காணிப்பாளர் – மது மஹாஜன்
 • தொழில் முனைவோர் மற்றும் கடன் சந்தையை மேம்படுத்த இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் (ஐபிபிஐ) – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
 • இந்தியா-இந்தோனேசியா இடையே (IND-INDO ​​CORPAT) 33வது பதிப்பின் கடற்படை பயிற்சியில் போர்ட் பிளேர், அந்தமான் & நிக்கோபார் தீவில் நடத்தப்படுகிறது.
 • மித்ர சக்தி இராணுவப்பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடத்தப்படுகிறது.
 • அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
 • அபுதாபியில் ஐந்து ஆண்டுகளுக்கு டி10 கிரிக்கெட் லீக் போட்டி நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • மெக்ஸிகோவின் அசபுல்கோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை ஆண்கள் டிராப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார்.
 • பிசிசிஐக்கு ரூ.11 கோடி இழப்பீடு தொகையை பிசிபி செலுத்தியது.

மார்ச் 20, 2019

 • கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்
 • தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள மொலங்கூரில் ஆசியாவின் மிகப்பெரிய சோளக்கருது உலர்த்தும் வசதி தொடங்கப்பட்டது.
 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் கனடா பாராளுமன்றத்தில் நுழைந்து வரலாற்றை உருவாக்கினார்.
 • கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவிவகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 • கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர் சூட்டப்பட்டது.
 • பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது.
 • செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா திட்டம்.
 • ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் கூகுளிற்கு49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்தது.
 • பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு (IWDRI) மீதான இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப் வெற்றிகரமாக முடிவடைந்தது.
 • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் – இந்தியாவின் முதல்லோக்பால்
 • மும்பை சமூக தொழிலாளி கவுரி சாவந்த் – முதல் திருநங்கை தேர்தல் தூதர்
 • ‘இடாய்’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டிற்கு இந்திய கடற்படை உதவி.
 • கணிதத்திற்கான ஏபெல் பரிசு – அமெரிக்கவின் கரென் உல்லென்பெக்
 • டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்.
 • இந்திய அணி வங்கதேசத்தை தோற்கடித்து 5வது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

மார்ச் 21, 2019

 1. மார்ச் 21 – இனவாத பாகுபாடை நீக்குவதற்கான சர்வதேச தினம்
 2. 2019 தீம்: உயரும் தேசியவாத மக்கள்தொகை மற்றும் தீவிர மேலாதிக்க சித்தாந்தங்களைக் கையாளுதல் மற்றும் எதிர்ப்பது.
 3. மார்ச் 21 – உலக கவிதை தினம்
 4. மார்ச் 21 – உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
 5. மார்ச் 21 – காடுகள் சர்வதேச நாள். 2019 தீம் – காடுகள் மற்றும் கல்வி.
 6. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அசாமில் இளம் வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி வளாக தூதர்கள் நியமனம்.
 7. வண்ணங்களின் திருவிழா – ஹோலி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
 8. சமூக ஊடக தளங்கள் மற்றும் இந்திய இணைய மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ஐஏஎம்ஏஐ) ஆகியவை எதிர்வரும் பொதுத் தேர்தல்களுக்கான அறிகுறிகளின் தன்னார்வ கோட்பாட்டை ஏற்றுக்கொண்டன.
 9. தாக்குதல் ஆயுதங்களை உடனடியாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டெர்ன்.
 10. பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே ப்ரூசெல்ஸில் நடைபெறும் முக்கியமான ஐரோப்பிய கவுன்சில் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
 11. இந்திய அமெரிக்கன் நியோமி ராவ் – கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க சர்க்யூட்நீதிபதி.
 12. ஆண்டின் சிறந்த வீரருக்கான சர் ரிச்சர்ட் ஹாட்லி பதக்கம் – கேன் வில்லியம்சன்
 13. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டி 2019ல் 368 பதக்கங்களை இந்தியா வென்றது.
 14. 5வது தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் SAFF மகளிர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேபாளத்தை இந்தியா எதிர்கொள்கிறது.

மார்ச் 22, 2019

 • மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்
 • 2019 தீம் – ‘Leaving no one behind’
 • பீகார் அதன் 107 வது உருவான தினத்தை கொண்டாடியது 1912 ஆம் ஆண்டு இந்த நாளன்று, பீகார் வங்காளத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
 • தில்லி நீதிமன்றம், புல்வாமா தாக்குதல் பயங்கரவாதியின் நெருங்கிய உதவியாளரான ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சஜ்ஜத் கானைமார்ச் 29 வரை NIA காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
 • ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சரத்து 50 செயல்முறையை தாமதப்படுத்தி மார்ச் 29 க்கும் அதன் பிறகு வரையிலும்  பிராக்ஸிட்டை ஒத்திவைக்க உடன்பட்டுள்ளனர்.
 • சீனாவில் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறவுள்ளது பாகிஸ்தான். இந்த கடன் அதன் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும்.
 • இந்திய புள்ளிவிவர நிறுவனம் வாக்காளர் சரிபார்ப்பு காகித ஆடிட் டிரெயில், VVPAT ஸ்லிப்பை பிரதான தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்குக் கணக்கிட்டு தனது அறிக்கையை அளித்தது.
 • பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வில் பிரதிநிதிகளை இந்த ஆண்டு அனுப்வில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது..
 • இந்திய விமானப்படை லங்காவி சர்வதேச கடல்சார் ஏரோ எக்ஸ்போ, லிமா 2019 பங்கேற்கவுள்ளது.
 • சாப் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில்  நேபாளை 3-1 என்ற கணக்கில் வென்று  இந்தியா ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.
 • ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா கலப்பு அணி பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 2-3 ரன்கள் வித்தியாசத்தில் சீன தைபேயிடம் தோற்று இந்தியா வெளியேறியது.

மார்ச் 23, 2019

 1. மார்ச் 23 – உலக வானியல் தினம், 2019 ஆண்டு கரு: “The Sun, the Earth and the Weather”
 2. அரசாங்கம் பயங்கரவாத நிதியத்தைத் தடுக்க பயங்கரவாத நிதியாளர்களின் சொத்துக்களை முடக்கவுள்ளது
 3. கேரளா நீர் ஆணையம் (KWA) கோடையில் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஜலம் ஜீவிதம் விழிப்புணர்வு பிரச்சாரம்.
 4. கேரளா ஹிருதயம் “Hridyam” – திறனை வளர்ப்பதில் முதன்முறையாக, சுகாதாரத் துறை இப்போது மின்-கற்றல் தீர்வுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது
 5. தமிழ்நாடு: யானை தாழ்வாரங்களில் பற்றிய அறிக்கையை உச்ச நீதிமன்றம் பரிசீலித்துள்ளது
 6. தெலுங்கானா: சிங்கூர் நீர் மட்டத்தில் கடுமையான வீழ்ச்சி
 7. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் JKLF இயக்கத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது.
 8. அமெரிக்க ஆதரவிலான சிரிய படை இஸ்லாமிய மாநிலங்கள் மீதான வெற்றியை அறிவித்துள்ளது
 9. “பூச்சியம் சகிப்புத்தன்மை” அணுகுமுறைக்கு பதிலளித்த போதிலும், பிரான்சின் “Yellow Vest” எனப்படும் அரசாங்க எதிர்ப்பு இயக்கம் அரசாங்க விரோத ஆர்ப்பாட்டங்களை நடத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
 10. இந்திய நிதியுதவி கல்வி வளாகம் நேபாளத்தில் திறக்கப்பட்டது
 11. ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2019 – லண்டனைச் சார்ந்த முன்னணி என்.ஆர்.ஐ. தொழிலதிபர்களான இந்துஸ்தான் குடும்பத்தினர் முதலிடத்தில் உள்ளனர்,
 12. ICC மகளிர் சர்வதேச தரவரிசை பட்டியல் – பேட்டிங்: 1) ஸ்மித் மந்தானா, பந்துவீச்சு: 1) ஜுலன் கோஸ்வாமி
 13. நியமனங்கள்: அடுத்த கடற்படை தலைவர் – துணை அட்மிரல் கரும்பீர் சிங், மேற்கத்திய கப்பற்படை தளபதி – அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங்
 14. வாக்கெடுப்புக் குறியீடு மற்றும் செலவு வரம்பை மீறுபவர்கள் மீது புகார்களுக்கு தேர்தல் ஆணையம் cVIGIL என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 15. முறையான துறைகளில் வேலைவாய்ப்பு உற்பத்தி 17 மாத உயர்வைத் தொட்டது என EPFO தகவல்
 16. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, ஆசிய சாம்பியன் ஜப்பானை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
 17. ஸ்ரீலங்கா வேக பந்து வீச்சாளர் மலிங்கா டி 20 உலகக் கோப்பை பிறகு ஓய்வு பெறுவார்.

 மார்ச் 24 & 25, 2019

 1. மார்ச் 24 – உலக காசநோய் தினம், 2019ஆம் ஆண்டின் காசநோய் தின கரு – ‘It’s time’.
 2. மார்ச் 25 – அடிமை முறை மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் சர்வதேச நினைவு நாள். 2019ஆம் ஆண்டின் கரு: “Remember Slavery: The Power of the Arts for Justice”
 3. குரோஷியா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய மூன்று நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொழிமுறை பயணம் மேற்கொண்டார்.
 4. யுனிஸ்கோ உலக பாரம்பரியமாக டிரிபிடகாவை அறிவிக்க முன்மொழிவுகளை இலங்கை ஜனாதிபதி சமர்ப்பித்தார்
 5. தாய்லாந்தின் முதல் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்தது
 6. நியூசிலாந்து பிரதம மந்திரி கிறிஸ்ட்சர்ச்சின் மசூதி தாக்குதல்களுக்கு உயர்மட்ட நீதிமன்ற விசாரணையை ஆணையிட்டர்
 7. WEF உலகளாவிய எரிசக்தி மாற்று குறியீட்டு, இந்தியா 76வது இடம், முதலாவது இடம் சுவீடன், 2வது சுவிட்சர்லாந்து, 3வது நார்வேநார்வே
 8. எச்.ஐ.வி. நோயாளிகளிடையே TB இறப்புகளில் இந்தியா 84% குறைத்துள்ளதாக ஐ நா குறிப்பிட்டுள்ளது
 9. டிஜிட்டல் பண வழங்கீட்டை ஆழப்படுத்த ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுவை RBI நியமித்துள்ளது
 10. இத்தாலி, சீனா புதிய ‘பட்டு சாலை (Silk Road)’ ஒப்பந்தம்
 11. அமெரிக்க இராணுவம் ஒமன் துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் உடன்படிக்கை ஒப்பந்தம்.
 12. டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், புது தில்லியில் ஒரு நாள் FinTech கூட்டத்தொடரை நிதி ஆயோக் ஏற்பாடு செய்தது.
 13. முதல் நான்கு கனரக சினூக் ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது
 14. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான இரண்டாம் சுற்று-ராபின் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

மார்ச் 26, 2019

 • 6 மாநிலங்களுக்கு சிறப்பு செலவு ஆய்வாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
 • மேற்கு வங்காளத்திலும், ஜார்கண்டிலும் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்புப் போலீஸ் கண்காணிப்பாளராக கே.கே.சர்மாவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
 • திரிபுரா மற்றும் மிசோரம் சிறப்பு மத்திய போலீஸ் கண்காணிப்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மிரினால் காந்தி தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஆஸ்திரேலியா, தீவிரவாத சம்பந்தப்பட்ட விஷயங்கள் காரணமாக சமூக ஊடக நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்படலாம் என்று எச்சரிக்கை விட்டுள்ளது.
 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோலன் ஹைட்ஸ் மீது இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரிக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்,
 • வெனிசுலாவிற்கு ஆதரவு அளித்து அமெரிக்கா ரஷ்யா மோதல்.
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) ஏப்ரல் முதல் நாளில் EMISAT உட்பட 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.
 • இந்திய ரேடார் நெட்வொர்க்கை கண்காணிப்பதற்காக EMISAT உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்திய ரிசர்வ் வங்கி,SWIFT நடைமுறைக்கு எதிராக செயல்பட்டதால் காரணமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது.
 • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அபுதாபி ஆன்ஷோர் பிளாக் 1இல் ஆய்வு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
 • ரெயில் அட்மிரல் ராஜேஷ் பெண்டர்கர், VSM – மகாராஷ்டிரா கடற்படைப் பகுதியின் flag officer.
 • அரசு, மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகள் 2019 யை அறிவித்தது
 • கடற்படையின் அணுசக்தி, உயிரியல், வேதியியல் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது.
 • இலங்கையில் இந்திய மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இடையில் கூட்டு பயிற்சிக்மித்ரசக்தி – VI நடை பெற்றது.
 • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கட்மட் Langkawi International Maritime மற்றும் Aerospace Exhibition, LIMA-19 இன் 15 வது பதிப்பில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • இந்திய ராணுவத்தின் மவுண்ட் மகலுவிற்கு மலையேறும் பயணத்தை பொது இராணுவ டைவிங் இன் டைரக்டர் மார்ச் 26,2019 ல் தொடங்கி வைத்தார்.
 • 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்வதை எளிதாக்க ‘பி.டபிள்யு.டி.’ மொபைல் செயலி பயன்படுத்தப்படவுள்ளது.
 • புது தில்லியில் இந்தியாவின் சூப்பர் 500 பேட்மின்டன் தொடங்கப்பட்டது.

மார்ச் 27, 2019

 • மார்ச் 27 – உலக தியேட்டர் தினம் 2019
 • லோக்பாலில் உள்ள அனைத்து எட்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்..
 • பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யூ.ஜி.சி) விவசாயத்தில் தொலைதூர பட்டப்படிப்பு திட்டங்களை தடை செய்தது
 • ஜப்பானில், க்யூஷு தீவின் தென்கிழக்கு கடற்கரையில் மியாசாகி என்ற இடத்தில் 5.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
 • இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் கோலான் ஹைட்ஸை அங்கீகரிக்க அமெரிக்காவின் முடிவைக்குறித்து உடனடியாக அவசரக்  கூட்டம்  நடத்த ஐ.நா. பாதுகாப்பு குழுவிற்கு சிரியா அழைப்பு விடுத்துள்ளது.
 • கோமரோஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ஐரோப்பிய பாராளுமன்றம் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக வணிகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய பதிப்புரிமை சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டது.
 • இந்தியா மற்றும் பங்களாதேஷ், பயணிகள் சுந்தர்பன்ஸிலிருந்து டாக்கா செல்வதற்கு கப்பல் சேவையை தொடங்கவுள்ளது.
 • நேபாள அரசு, நேபாள முதலீட்டு உச்சி மாநாட்டை 2019 மார்ச் 29- 30 காத்மாண்டுவில் ஏற்பாடு செய்கிறது.
 • குரோஷியாவின் தலைநகரான ஜக்ரெப்பில், இந்தியா-குரோஷிய பொருளாதார மன்றக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார்.
 • இந்தியா மற்றும் குரோஷியா விளையாட்டு, சுற்றுலாத்துறை மற்றும் ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சபை நிறுவல் ஆகிய முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, DRDO ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் தீவில் இருந்து மிஷன் சக்தி என்ற செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை (A-SAT)வெற்றிகரமாக நடத்தியது.
 • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது.
 • மலேசியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளுக்கு 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோல்கீப்பர் சவீதா புனியா தலைமைதாங்குகிறார்.

மார்ச் 28, 2019

 1. கோவாவில் திபக் பாஸ்கர் அமைச்சரவையில் பதவி ஏற்றார்.
 2. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், சாதி பற்றிய சாட்சியத்தை (FIR) முதல் தகவல் அறிக்கைகளில் குறிப்பிட தடை செய்துள்ளது.
 3. JeM தலைவர் மசூத் அசாரை தடை செய்யும் வகையில் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வரைவோலை சமர்ப்பித்துள்ளது
 4. ஐ.நா. தடைகளில் இருந்து பயங்கரவாத குழுக்களை சீனா பாதுகாக்கிறது
 5. பேங்க் ஆப் பரோடா வங்கியில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது
 6. பி.சி.சி.ஐ. இன் விளம்பர-தத்துவ நெறிமுறை அலுவலராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்.
 7. இந்தியா-ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கும் இடையேயான ஒப்பந்தம்
 8. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் விளையாட்டுகள் சேர்க்க IOC பரிந்துரை
 9. இந்தியா மற்றும் தென் கொரியா மலேசியாவில் ஈப்போவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்தன.
 10. இந்தியா ஓபன் பேட்மின்டனில், 4வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவை சேர்ந்த டாமி சுஜியாரோவை இந்தியாவின் சுபாங்கர் டீ தோற்க்கடித்தார்.

மார்ச் 29, 2019

 1. அசாம் தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் சாஹூ கவுகாத்தியில் உள்ள எனஜோரி முன்முயற்சியை தொடங்கினார்.
 2. சவுதி, ஜெர்மனி மீதான ஆயுத ஏற்றுமதி தடையை ஆறு மாதங்கள் உயர்த்தி உள்ளது
 3. ஐ.நா. சபை பயங்கரவாத நிதியத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது
 4. வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் கைடோ 15 ஆண்டுகள்  பொது அலுவலகத்தை பயன்படுத்த தடை
 5. GST ஆணையம் வியாபாரத்தின் உரிமையாளர் மாற்றம் அல்லது வேறு மாற்றம் செய்யும் விதிமுறையை தெளிவுபடுத்தியுள்ளது
 6. ஐந்து வகையான காபிகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
 7. தனியார் துறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு காம்பாட் மேலாண்மை முறைமை மேம்படுத்தப்பட்டுள்ளது
 8. இந்தியாவின் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பரூப்பள்ளி கஷ்யப் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்
 9. 12வது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மானு பாக்கர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்.

மார்ச் 30, 2019

 1. எதிர்ப்பு செயற்கைகோள் குறைந்தபட்சம் 270 துண்டுகளாக சிதைந்துள்ளதை வட அமெரிக்க ஏரோஸ்பேஸ் பாதுகாப்புக் கட்டளை (NORAD) மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 2. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு இந்திய, அமெரிக்கா வலியுறுத்தல.
 3. சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை
 4. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 வங்கி கிளைளை திறக்க RBI உத்தரவு
 5. மனிதர்கள் பூமியின் காந்தப்புலங்களை தங்களை அறியாமல் உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுகிறார்கள் என கண்டுபிடித்துள்ளனர்.
 6. இந்தியா-பொலிவியா வணிக மன்றத்தில் இந்திய ஜனாதிபதி உரையாற்றினார்
 7. நியமனங்கள்: அட்மிரல் சூராஜ் பெர்ரி – கிழக்கு கடற்படை கட்டளை கொடி அதிகாரி
 8. மகேஷ் சிங் – கர்நாடகா பகுதிக்கு கட்டளை கொடி அதிகாரி
 9. சஞ்சய் ஜெயவர்தனாவலு – தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)
 10. சதீஷ் ரெட்டி – துணைத் தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)
 11. இந்தியா – பொலிவியா இடையே எட்டு ஒப்பந்தங்கல் கையெழுத்தாயின.
 12. விருதுகள்: “Condor de Los Andes en el Grado de Gran Collar” (பொலிவியாவின் மிக உயர்ந்த மரியாதைக்கான விருது) – இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
 13. புவி நாள் விருது – அலெம்பா இம்சுங்கர் (நாகலாந்தின் கிஃபைர் மாவட்டத்தில் உள்ள Fakim ​​வனவிலங்கு சரணாலய வன காவலர்)
 14. ‘சங்கல்ப்’ (sangalp) செயலி – இது முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க ஒரு அஸ்ஸாமின் சிறப்பு முயற்சியாகும்
 15. இந்திய ஓபன் பேட்மின்டன் அரை இறுதிப்போட்டியில் சீனாவின் ஹுவாங் யுவியங்கியாவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

மார்ச் 31, 2019

 1. இலங்கையில் வெப்பநிலை கட்டுப்பாட்டிர்க்கான குளிர் சேமிப்பக வசதிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
 2. ஸ்லோவாக்கியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி: சுசானா காபுடோவா
 3. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனைத்து இந்திய பட்டபடிப்பிற்கும் சமநிலை வழங்கியுள்ளது
 4. IIT மெட்ராஸ் பெட்ரோலியம் கழிவுகளை பயனுள்ள வினைபொருள் மாற்றியுள்ளது
 5. கோட்டையத்தில் உள்ள மானர்காடு பகுதி மக்கள் ‘தொழில்நிதம் ஆப்’ உதவியுடன் அவர்களது வழக்கமான வீட்டுப் பணிகளை கவனித்துக் கொள்ளலாம்.
 6. முதல் செயற்கைகோள் EMISAT- ஐ வானில் சுமந்து செல்லும் PSLV
 7. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்ஸனுக்கு எதிரான இறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியுற்றார்
 8. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் தென் கொரியா இந்தியாவை தோற்கடித்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *