10 ஆம் வகுப்பு சமச்சீர் தமிழ்

CURRENT AFFAIRS GROUP-I GROUP-II GROUP-IV TARGET STUDY CENTRE Model Questions target-study-centre-model-questions TET/TRB TNPSC TNPSC notes & books TNUSRB

கம்பராமாயணம்

சொற்பொருள்:

 1. ஆயகாலை – அந்த நேரத்தில்
 2. அம்பி – படகு
 3. நாயகன் – தலைவன்
 4. நாமம் – பெயர்
 5. துறை – தோணித்துறை
 6. தொன்மை – தொன்றுதொட்டு
 7. கல் – மலை
 8. திரள் – திரட்சி
 9. காயும் வில்லினன் – பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்
 10. துடி – பறை
 11. அல் – இருள்
 12. சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
 13. திரை – அலை
 14. உபகாரத்தன் – பயன்கருதாது உதவுபவன்
 15. கூவா முன்னர் – அழைக்கும் முன்னர்
 16. குறுகி – நெறுங்கி
 17. இறைஞ்சி – வணங்கி
 18. சேவிக்க – வணங்க
 19. மருங்கு – பக்கம்
 20. நாவாய் – படகு
 21. நெடியவன் – இராமன்
 22. குறுகினன் – வந்துள்ளான்
 23. இறை – தலைவன்
 24. பண்ணவன் – இலக்குவன்
 25. பரிவு – இரக்கம்
 26. குஞ்சி – தலைமுடி
 27. மேனி – உடல்
 28. மாதவர் – முனிவர்
 29. அருத்தியன் – அன்பு உடையவன்
 30. முறுவல் – புன்னகை
 31. விளம்பல் – கூறுதல்
 32. சீர்த்த – சிறந்த
 33. பவித்தரம் – தூய்மையானது
 34. இனிதன் – இனிமையானது
 35. உண்டனெம் – உண்டோம் என்பதற்குச் சமமானது
 36. தழீஇய – கலந்த
 37. கார்குலாம் – மேகக்கூட்டம்
 38. பார்குலாம் – உலகம் முழுவதும்
 39. இன்னல் – துன்பம்
 40. ஈர்கிலா – எடுக்க இயலாத
 41. தீர்கிலேன் – நீங்கமாட்டேன்
 42. அடிமைசெய்குவேன் – பணிசெய்வேன்
 43. குரிசில் – தலைவன்
 44. இருத்தி – இருப்பாயாக
 45. நயனம் – கண்கள்
 46. இந்து – நிலவு
 47. நுதல் – நெற்றி
 48. கடிது – விரைவாக
 49. முடுகினன் – செலுத்தினன்
 50. முரிதிரை – மடங்கிவிழும் அலை
 51. அமலன் – குற்றமற்றவன்
 52. இடர் – துன்பம்
 53. அமலன் – குற்றமற்றவன்
 54. இளவல் – தம்பி
 55. துன்பு – துன்பம்
 56. உன்னேல் – நினைக்காதே

 

இலக்கணக்  குறிப்பு 

 1. போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
 2. கல்திரள்தோள் – உவமைத்தொகை
 3. நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
 4. இருந்தவள்ளல் – பெயரெச்சம்
 5. வந்துஎய்தினான் – வினையெச்சம்
 6. கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 7. குறுகி, சேவிக்க – வினையெச்சம்
 8. கழல் – தானியாகுபெயர்
 9. வந்தனென், தீர்கிலேன், செங்குவென் – தன்மை ஒருமை வினைமுற்று
 10. அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
 11. வருக – வியங்கோள் வினைமுற்று
 12. பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
 13. இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
 14. தேனும் மீனும் – எண்ணும்மை
 15. மாதவர் – உரிச்சொற்றொடர்
 16. அமைந்த காதல் – பெயரெச்சம்
 17. சீர்த்த – ஒன்றன்பால் வனைமுற்று
 18. தழீஇய – சொல்லிசை அளபெடை
 19. கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
 20. உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
 21. தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 22. மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
 23. இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
 24. நெடுநாவாய் – பண்புத்தொகை
 25. தாமரை நயனம் – உவமைத்தொகை
 26. நனிகடிது – உரிச்சொற்றொடர்
 27. நெடுநீர் – பண்புத்தொகை
 28. என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
 29. நன்னுதல் – பண்புத்தொகை
 30. நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை

 

 பிரித்தறிதல் :

 • நெடுநாவாய் – நெடுமை + நாவாய்
 • நெடுநீர் – நெடுமை + நீர்

ஆசிரியர் குறிப்பு:

 • கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
 • இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
 • கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
 • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
 • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
 • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
 • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
 • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
 • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
 • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
 • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

நூல்குறிப்பு:

 • வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
 • கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
 • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
 • கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
 • காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
 • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்கு கதி” என்பர்.
 • குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்


இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.

(இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி,வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர்.

தமிழ்மொழியில்இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது.

 1. பாலகாண்டம் – இருபத்துநான்கு படலங்கள்.
 2. அயோத்தியா காண்டம் – பதின்மூன்று  படலங்கள்.
 3. ஆரண்ய காண்டம் – பதின்மூன்று  படலங்கள்.
 4. கிட்கிந்தா காண்டம் – பதினேழு படலங்கள்
 5. சுந்தர காண்டம் – பதினான்கு படலங்கள்
 6. யுத்த காண்டம் – நாற்பத்து இரண்டு படலங்கள்

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்

இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும்தமிழுக்கு கதி என்பர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *