18 செப்டம்பர் 2019 ஒருவரி நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS

 • செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம்
 • செப்டம்பர் 18 – உலக நீர் கண்காணிப்பு தினம்
 • இந்தியாவின் ஸ்டீல் அமைச்சகம் 2019 செப்டம்பர் 23 ஆம் தேதி ‘சிந்தன் சிவீர்’ என்ற ஒரு நாள் கூட்டத்தை புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
 • ரயில் பெட்டிகளில் ஏ.சி.க்கள் இயங்கும் மற்றும் மின்சாரம் வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப முறை புதிதாக மாற்றப்படவுள்ளது. இத்தகைய புதிய தொழில்நுட்ப மாற்றம் ஆண்டுக்கு சுமார் 1400 கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிப்பைக் கொண்டுவரும்.
 • நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் புத்தரின் பழங்கால வெண்கல சிலையை கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேலிடம் புதுடில்லியில் வழங்கினார். “பூமிஸ்பர்ஷா முத்ராவில் அமர்ந்த புத்தர்” என ஆவணப்படுத்தப்பட்ட இந்த சிலை கி.பி 12 ஆம் நூற்றாண்டை சார்ந்தது ஆகும்.
 • செமிகண்டக்டர்ஸ் மற்றும் சாப்ட்வேர்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனமான டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ), தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஒரு ஹைடெக், அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைக்க உள்ளது.
 • தமிழ்நாட்டில் உள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மான்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்வதற்கான ஒரு தனித்துவமான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூரின் சிவகங்கை தோட்டத்தில் எட்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் மேம்படுத்தல் பணிகளைத் தொடர்ந்து இந்த பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
 • 1971 பங்களாதேஷ் விடுதலைப் போரின் தியாகிகளின் நினைவாக திரிபுராவில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க பங்களாதேஷ் அரசு முன்மொழிந்துள்ளது.
 • உத்தர்காண்ட் விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 • தற்போது நடைபெற்று வரும் ‘கட்டுமான தொழில்நுட்ப ஆண்டின்’ நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய பொதுப்பணித் துறை “பொது கட்டிடக்கலைகளில் வளர்ந்து வரும் போக்குகள்” குறித்த தேசிய கருத்தரங்கை புதுதில்லியில் உள்ள விஜியன் பவனில் செப்டம்பர் 18, 2019 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
 • வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு (பிஎஸ்எம்)” இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் 2019 ஆகஸ்ட் 20 ஆம் தேதி, இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தேநீர் உள்ளிட்ட வேளாண் பொருட்களின் இருபத்தி மூன்று ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் இறக்குமதியாளர்களை சந்தித்தனர்.
 • புது தில்லியில் உள்ள தேசிய கலாச்சார கேலரியில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ஜெய்ப்பூர் மாளிகையில், சித்ராச்சார்யா உபேந்திர மகாராத்தை பற்றிய ‘சஷ்வத் மகாராத்தி கண்காட்சியை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹ்லாத் சிங் படேல் மற்றும் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் ஸ்ரீ அனில் பைஜல் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) பாதுகாப்பு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உடன் இணைந்து மனித விண்வெளி மிஷனுக்கான மைய அமைப்புகளை மேம்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
 • (ஏர்-டு-ஏர்) விண்ணிலிருந்து விண்ணைதாக்கும் ஏவுகணை ஆஸ்ட்ரா, ஒடிசா கடற்கரையில், செப்டம்பர் 16, 2019 அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
 • புதுடெல்லியின் விஜியன் பவனில் 2017 ஆம் ஆண்டு செயல்திறன் ஆண்டிற்கான விஸ்வகர்மா ராஷ்டிரிய புரஸ்கார் (விஆர்பி) மற்றும் தேசிய பாதுகாப்பு விருதுகள் (என்எஸ்ஏ) ஆகியவற்றை ஸ்ரீ சந்தோஷ்குமார் கங்வார் வழங்கினார்.
 • புதுடெல்லியின் டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற யு -17 ஜூனியர் பாய்ஸ் சுப்ரோடோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் மேகாலயாவின் ஹோப்வெல் எலியாஸ் மேல்நிலைப்பள்ளி, 1-0 என்ற கோல் கணக்கில், பங்களாதேஷ் கிருதா சிக்ஷா புரோதிஷ்டானை (பி.கே.எஸ்.பி) தோற்கடித்தது படத்தை ஜெயித்தது.
 • சாங்ஜோவில் தொடங்கவுள்ள, சீனா ஓபன் பேட்மிட்டனில், உலக சாம்பியனான பி வி சிந்து மற்றும் உலக நம்பர் 8 வீராங்கனையான சாய்னா நேவால் ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *