அக்டோபர் – 06, 07 முக்கியமான நிகழ்வுகள்

CURRENT AFFAIRS GROUP-I GROUP-II

அக்டோபர் – 06

இந்திய வானியற்பியலார் மேகநாத சாஃகா பிறந்த தினம்

  • பிறப்பு: மேகநாத சாஃகா அக்டோபர் 06, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் பிறந்தார்.
  • இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவர்.
  • சாஹா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
  • 1927 இல் அவர் தருவித்த அயனியாக்க சமன்பாட்டை பெருமைப்படுத்தும் விதமாக இராயல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவரது பெயர் நோபல் பரிசுக்குப் (1935 – 36) பரிந்துரைக்கப்பட்டது.
  • இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கல்கத்தாவில் இவர் 1948-ல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
  • உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 63-வது வயதில் (1956) மறைந்தார்.

அக்டோபர் – 07

டியேகோ கொஸ்டா

டியேகோ ட சில்வா கொஸ்டா பிறப்பு அக்டோபர் 7, 1988) தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் அடிப்பானாக எசுப்பானிய காற்பந்துக் கழகமான அத்லெடிகோ மாட்ரிட்டிலும் எசுப்பானிய தேசிய அணியிலும்ஆடுகிறார். இவரது முதன்மை பண்புக்கூறுகளாக உடல்திறம், கோல் அடிப்பது மற்றும் பந்தை தன்வசம் வைத்திருப்பது ஆகியனவென்று விளையாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர். எதிராளிகளுடன் நேரெதிர் மோதல்களில் ஈடுபட்டதாகப் பலமுறை தண்டிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன் விளையாட்டு வாழ்வுப் பயணத்தை போர்த்துக்கல்லின் பிராகா விளையாட்டுக் கழகத்திலும் பெனாபீல் காற்பந்துக் கழகத்திலும் துவங்கினார். 2007ஆம் ஆண்டில் அத்லெடிகோ மாட்ரிட் கழகத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிருந்து பிராகா, செல்ட்டா விகோ, ஆல்பாசெட் கழகங்களுக்கு ஆட கடனாக அனுப்பப்பட்டார். 2009இல் ரியல் வல்லாடோலிடு கழகத்திற்கு விற்கப்பட்டார். அடுத்த பருவத்தில் மீண்டும் அத்லெடிகோவிற்கு ஆடத் தொடங்கினார்; அவ்வணியில் முதன்மை அணியாளராக 27 கோல்களை அடித்துள்ளார். பின்னர் செல்சீ கழகத்தில் £32 மில்லியனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் தனது முதல் பருவத்திலேயே 21 கோல்கள் அடித்து இங்கிலீஷ் பிரீமியர் லீக் கூட்டிணைவுக் கோப்பைகளை வெல்ல உதவினார்; 2017இல் செல்சீ மற்றுமொரு கூட்டிணைவு கோப்பை வெல்லவும் முதன்மைப் பங்காற்றினார்.

பன்னாட்டளவில் கொஸ்டா தனது பிறந்த நாடான பிரேசிலுக்கு 2013இல் இருமுறை ஆடியுள்ளார். பின்னர் இவர் எசுப்பானியாவிற்காக ஆட விழைந்தபோது செப்டம்பர் 2013இல் இவருக்கு எசுப்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. எசுப்பானியாவிற்காக முதலில் மார்ச் 2014இல் ஆடினார். 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் எசுப்பானியாவிற்காக ஆடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *