மருத்துவத்துக்கான நோபல்பரிசு அறிவிப்பு – மனிதசெல்கள் ஆக்சிஜனின் அளவை உணர்ந்து செயல்படுவதை கண்டு பிடித்ததற்காக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு விருது

CURRENT AFFAIRS GROUP-I GROUP-II

 

 

2019ம் ஆண்டுக்‍கான மருத்துவத்துறை நோபல் பரிசு, அமெரிக்‍கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்‍கு அறிவிக்‍கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த Alfred Nobel நினைவாக, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டுக்‍கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் Stockhome-ல் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுகின்றன.

இன்று, மருத்துவ துறைக்‍கான நோபல் பரிசு அறிவிக்‍கப்பட்டது. மனித செல்கள், ஆக்‍சிஜன் கிடைக்‍கும் அளவை உணர்ந்து எவ்வாறு தகவமைத்துக்‍கொள்கின்றன என்ற கண்டுபிடிப்புக்‍காக நோபல் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது. அமெரிக்‍காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் கெலின், க்‍ரேக்‍ செமன்சா, இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ராட்க்‍ளிஃப் ஆகிய 3 பேருக்‍கு விருது பகிர்ந்தளிக்‍கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *