அக்டோபர் – 08 முக்கியமான நிகழ்வுகள்

CURRENT AFFAIRS GROUP-I GROUP-II
இந்திய வான்படை தினம் 

இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.  தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.

குறிக்கோள்

இந்திய வான்படையின் குறிக்கோள் (mission) எனப்படுவது ஆயுதப்படைச் சட்டம் 1947, இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950′ ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும்.

இந்திய வான்படையின் கட்டமைப்பு

இந்திய ஜனாதிபதி அனைத்து இந்திய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் விமானப்படைத் தலைவராக உள்ள தலைமைத் தளபதி ஆவார். இந்திய விமானப் படைத் தலைவராக இந்திய விமானப்படை தளபதி இருக்கிறார்.இந்திய விமானப்படை தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே விமானப்படையின் மார்ஷல் பதவியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *