இந்த ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற இரு பெண்கள்!

CURRENT AFFAIRS GROUP-I GROUP-II

Image may contain: 3 people, people smiling

 

1. 2019-ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.3%லிருந்து 6.1% என்று குறைத்த ஐ.எம்.எஃப்.

Image may contain: plant and outdoor

2019-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% ஆக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் கூறியதை தற்போது மாற்றி குறைவாக 6.1% வளர்ச்சி விகிதமே எதிர்ப்பார்க்க முடியும் என்று பன்னாட்டு நிதியம் ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.

தனது ஏப்ரல் மாத கணிப்பிலிருந்து 1.2% வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தது பன்னாட்டு நிதியமைப்பு.

2018-ல் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8%, ஐ.எம்.எஃப். தனது உலகப் பொருளாதாரப் பார்வையில் 2019-க்கான இந்திய வளர்ச்சி விகிதம் 6.1% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.

ஆனால் 2020ம் ஆண்டு வாக்கில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு 7% வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்கிறது ஐ.எம்.எஃப்.

ஞாயிறன்று உலக வங்கியும் இந்திய பொருளாதார வளர்ச்சியை 2019-ம் ஆண்டில் 6% ஆகக் குறைத்தது. உள்நாட்டில் தேவைப்பாடு எதிர்பார்ப்பை விட மந்தமாக இருக்கும் அதனால்தான் பொருளாதார வளர்ச்சி 1.2% குறையும் என்று ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.

2019-ல் சீனா 6.1% வளர்ச்சியில் செல்லும் என்று கூறிய ஐ.எம்.எஃப். 2020ல் சீனாவின் வளர்ச்சி விகிதம் 5.8% ஆகவே இருக்கும் என்று கணித்துள்ளது.

இந்தியாவின் அதிகரித்து வரும் பொதுக்கடனைக் குறைக்க நம்பகமான நிதிப்பலப்படுத்த பாதையைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. பொதுத்துறை வங்கிகளை நிர்வகித்தல் அவர்களது கடன் வழங்கல் பலப்படுத்தப் பட வேண்டியுள்ளது, மேலும் நிதியமைப்பில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கைக் குறைக்க வேண்டிய தேவையுள்ளது, உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்த நிலச் சீர்த்திருத்தங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

2. ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது கப்பலின் பயணம் நிறைவு!

Image may contain: sky, ocean, outdoor, nature and water

மிதக்கும் ஆய்வுக்கூடாமாகவும், ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது கப்பல் எனவும் கூறப்படும் எனர்ஜி அப்சர்வர் லண்டனில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகளை அறிந்தவர்கள் ஒன்றுகூடி மின்சாரம், காற்று மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் கப்பலை கண்டறிந்தனர்.

2017-ம் ஆண்டு பிரான்சின் செய்ன்ட்-மாலோவில் இருந்து புறப்பட்டு, 25 நாடுகளைக் கடந்து கடைசி நிறுத்தமாக லண்டனின் தேம்ஸ்-க்கு வந்துள்ளது.

168 சதுர மீட்டர் சூரிய மின் தகடுகள், 12 மீட்டர் கடல் சிறகுகள் மூலம் சூரிய மற்றும், காற்றாலை மின் சக்திகள் சேமிக்கப்படுகின்றன. இவை இல்லாத நேரத்தில் கடல் நீரில் இருந்து உப்பு, மினரல்களை நீக்கிய பின், ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்து சேமிக்கப்பட்ட சக்தியைக் கொண்டு படகு செலுத்தப்படுவதாக அதன் கேப்டன் எருஸ்ஸார்ட் ((Erussard)) தெரிவித்தார்.தற்போது 60 லட்சம் யூரோக்கள் செலவில் உருவாக்கப்பட்ட இது, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் போல அனைவரும் வாங்க வாங்க விலை மலிவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

3.நிலவில் பயிர்ச்செய்கை: சீனாவின் ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி

No photo description available.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சீனாவும் நிலவிற்கு விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.இதில் புதிய முயற்சி ஒன்றினையும் சீனா மேற்கொண்டிருந்தது.அதாவது Lunar Micro Ecosystem (LME) எனப்படும் 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய உயிர்க்கோளம் ஒன்றினையும் வைத்து அனுப்பியிருந்தது.குறித்த உயிர்க் கோளத்தில் பருத்தி விதை, தக்காளி விதை, ஈஸ்ட், பழ ஈக்களின் முட்டை, Arabidopsis thaliana எனப்படும் களை மற்றும் எண்ணெய் வித்துக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த வித்துக்களை நிலவில் முளைக்க வைத்து பார்ப்பதே சீன ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.எனினும் தற்போது பருத்தி விதை மாத்திரம் முளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ் விதையிலிருந்து ஒரு இலை மாத்திரம் வெளிவந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4.வோடபோன் மூலம் இந்தியாவில் களம் இறக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம்!

No photo description available.

இந்தியாவின் முதல் 5ஜி தொழில்நுட்ப சேவை வோடபோன் ஐடியா நிறுவனம் மூலம் நாட்டில் களம் இறக்கப்பட்டுள்ளது.

சீன டெலிகாம் நிறுவனமான ஹூவே இந்தியாவில் முதன்முறையாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வோடபோன் ஐடியா நிறுவன தொழில்நுட்ப தலைவர் விஷாந்த் வோரா கூறுகையில், “எங்களது நெட்வொர்க் திறனை வளர்க்க தொடர்ந்து எதிர்காலத்துக்கான புதிய தலைமுறை மக்களுக்கான தொழில்நுட்பத் தேவையை செயல்படுத்தி வருகிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனையும் உட்புகுத்தி இருப்பது இந்தியாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப அப்டேட் ஆகும். டிஜிட்டல் யுகத்துக்கான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளோம்” என்றுள்ளார்.

வோடபோன் ஐடியாவின் 5ஜி தொழில்நுட்ப நெட்வொர்க் என்பது இந்தியாவின் முதன்மையான செயல்திட்டம் ஆகும். சர்வதேச அளவில் இது மூன்றாம் செயல்பாட்டுத் திட்டம்.

 

5. இந்த ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற இரு பெண்கள்!

Image may contain: 3 people, people smiling

உலகளவில், இலக்கிய வாசகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த புக்கர் பரிசு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு லண்டனில் பிரசுரமாகும் நாவல்களுக்கு வழங்கப்படும் இவ்விருது உலக அளவில் மிகப் பிரபலமானது. புக்கர் பரிசு எனப்படும் இந்த விருது, கடந்த 1969-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அறுபதுகளின் இறுதியில், பிரிட்டனில் `ஜொனாதன் கேப்’ (Jonathan Cape) என்னும் பதிப்பகத்தை நடத்தி வந்தவர் டாம் மாஸ்ச்லெர் (Tom Maschler). இவர், தனது ‘ஜொனாதன் கேப் ‘ பதிப்பகத்தின் மூலம் பல புதிய எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கேர்சியோ மார்க்வேஸ் எழுதிய ‘One Hundred Years of Solitude’ நூலை பிரிட்டனில் ஜொனாதன் கேப் பதிப்பகம்தான் வெளியிட்டது.

எழுத்தாளர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த டாம், நிறைய நூல்களைப் பதிப்பித்து வந்த `புக்கர் பிரதர்ஸ்’ என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை வழங்குவதற்கு வழிவகை செய்தார். தொடக்கத்தில் அந்த விருது புக்கர் – மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது. எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 முதல் இப்பரிசுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட மான் குரூப் (Man Group) என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் பரிசின் பெயரை புனைவுகளுக்கான ‘மான் புக்கர் பரிசு’ (Man Booker Prize) என மாற்றினர். 21,000 பவுண்டுகளாக இருந்த பரிசுத் தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 50,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டது.

79 வயதான மர்கார்ட் அட்வுட் பெறும் இரண்டாவது புக்கர் பரிசு இது. கடந்த 2000 ஆம் ஆண்டு இவரது The Blind Assassin (தி பிளைண்டு அசாசின்) நூலும், தற்போது The Testaments ( தி டெஸ்டாமென்ட்ஸ்) என்னும் நூலும் இவருக்கு புக்கர் பரிசைப் பெற்றுத் தந்தது. நாவல் மட்டுமன்றி கவிதைகளும் எழுதக் கூடியவர் மர்கார்ட்.

பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ள இவர் அரசியல், பெண்ணியக் கதைகள் எனப் பல தளங்களில் புனைகதைகளை எழுதியுள்ளார். இதுவரை, புக்கர் பரிசு வென்றவர்களிலேயே இவர்தான் வயது முதிர்ந்தவர்.

60 வயதான பெர்னடைன் எவரிஸ்டா ஆங்கிலோ நைஜீரிய பெண்மணி. பிரிட்டனின் முதல் கறுப்பின நாடகக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து நடத்தியவர். இவரது Girl, Woman, Other, நூலுக்காக இவருக்கு புக்கர் பரிசு கிடைத்திருக்கிறது.

சிறுகதை, நாடகம், கவிதை, இலக்கிய விமர்சன நூல்கள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரியும் எவரிஸ்டோ கறுப்பின மக்கள், பெண்கள் குறித்து தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருபவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *